தேவையானவை: கத்திரிக்காய் - 10, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி பேஸ்ட், புளி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயை காம்பு பகுதி நறுக்காமல், அடி பக்கத்தில் மெல்லியதாக கத்தியால் கீறவும். இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், புளி பேஸ்ட், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கத்திரிக்காயின் உள்ளே நிரப்பவும். வாணலியில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு கத்திரிக்காயாக வதக்கி எடுக்கவும்.
குறிப்பு: இதை தயிர் சாதத்துக்கு தொட்டு சாப் பிடலாம். சூடான சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.