அது ஒரு ராயல் கேஸினோ கிளப். உள்ளே கோடிகளில்தான் சூதாட்டம் நடக்கும். அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாஸ்வேர்டு உண்டு. அதைச் சொன்னால்தான், உள்ளேயே விடுவார்கள். அதற்குள் போக ஆசைப்படுகிறார் ஹீரோ. ஆனால், அவரிடம் பாஸ்வேர்டு இல்லை. கேஸினோவின் வாசலில் ஒளிந்திருந்து கவனிக்கிறார்.
அப்போது ஒரு நபர் வருகிறார். அவரிடம் வாட்ச்மேன், '12' என்கிறார். உடனே வந்தவர், '6' என்று திரும்பச் சொல்ல, உள்ளே போக அவருக்கு அனுமதி கிடைக்கிறது. அதேபோல அடுத்து வந்தவரிடம் வாட்ச்மேன், '6' என்றதும், வந்தவர் '3' என்கிறார். அவரும் உள்ளே போய்விடுகிறார்.
இதை ஒளிந்திருந்து கவனித்த ஹீரோ, 'இவ்ளோதானா மேட்டர்?' என்று ஸ்டைலாக வாட்ச்மேன் முன்னால் போய் நிற்கிறார். அவர், '20' என்கிறார். நம்ம ஹீரோ, '10' என்கிறார் பெருமையாக. ஹீரோவுக்குத் தர்ம அடி விழுகிறது. ஏன், என்ன தப்பு?
கொஞ்சம் நல்லா யோசிங்க... விடை தெரியாதவங்க, அப்படியே ஸ்க்ரோல் பண்ணுங்க...
வாட்ச்மேன் முதலில் வந்தவரிடம் '12' என்றார். ஆங்கிலத்தில் twelve. இதில் மொத்தம் 6 எழுத்துக்கள். அதைத்தான் வந்தவர் திரும்பிச் சொன்னார். 6 (Six) என்பதற்கு 3 என்று சொன்ன பதிலும் அப்படித்தான். ஆனால் ஹீரோ, 'சொல்றதுல பாதி' என்று நினைத்துச் சிக்கிக்கொண்டுவிட்டார். 20 (twenty) என்பதற்கு 6 என்பதே சரியான விடை!