தேவையானவை: பசும்பால் - 2 லிட்டர், சர்க்கரை - அரை கிலோ, பே வாட்டர் - 2 கப், சர்க்கரை சேர்க்காத கோவா, பாதாம், முந்திரி, திராட்சை - தேவையான அளவு.
செய்முறை: பாலைக் கொதிக்க வைத்து, பே வாட்டர் சேர்த்து பாலை திரித்து, ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி, பனீர் தயாரிக்கவும். இதை நீள வடிவத்தில் ஷேப் செய்யவும். சர்க்கரையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசுக்கு பதத்தில் பாகு வைக்கவும். நீளவாக்கில் ஷேப் செய்த பனீரை இந்தப் பாகில் போட்டு ஊற வைக்கவும். பரிமாறும் முன் வெளியே எடுத்து கத்தியால் ஸ்லைஸ் செய்து அதன் உள்ளே முந்திரி, திராட்சை, கோவா ஆகியவற்றைக் கலந்து சாண்ட்விச் செய்யவும். கலர் கலராகக் கூட சாண்ட்விச் செய்யலாம்.