எதிர்ப்பு வந்தால் அது உன் துணிவுக்கு சோதனை !
வெறுப்பு வந்தால் அது உன் பிடிப்புக்கு சோதனை !
துன்பம் வந்தால் அது உன் திறமைக்கு சோதனை !
வறுமை வந்தால் அது உன் நேர்மைக்கு சோதனை !
சபலம் வந்தால் அது உன் மனஉறுதிக்கு சோதனை !
தோல்வி வந்தால் அது உன் வலிமைக்கு சோதனை !
கோபம் வந்தால் அது உன் பொறுமைக்கு சோதனை !
சோம்பல் வந்தால் அது உன் சுறுசுறுப்புக்கு சோதனை !
வெற்றியாளன் இது போன்ற வேகத்தடைகளை
விவேகமென்னும் ஏணியாக்கி ஆக்கி சாதனைப்படைக்கிறான்!