தேவையானவை: நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், ப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை) பொடி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... சுரைக்காயை சேர்க்கவும். மஞ்சள்தூள் தூவி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தேவையென்றால் கொஞ்சம் நீர் தெளிக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 10 நிமிடம் கழித்து காயை நன்றாக கிளறி, ஃப்ளாக்ஸ் சீட் பொடி தூவி, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடத் துக்குப் பிறகு இறக்கவும்.