KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்! EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்!

Go down  Message [Page 1 of 1]

உலகம் முழுக்க நுகர்வோர் பொருட்களை விற்கும் பிரமாண்டமான நிறுவனத்தின் சேல்ஸ் மீட்டிங் அது. அந்த வருடம் ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் டாலர்கள் வருமானம் ஈட்டித் தந்த உற்சாகத்தில் மார்க்கெட்டிங் ஆட்கள் குழுமியிருந்தார்கள். ஜான் என்ற கடைநிலை சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவ்வுடன் வந்து அமர்ந் தார், நிறுவனத்தின் துணைத் தலைவர்.

மீட்டிங் துவங்கு முன், ''நீங்கள் அனைவரும் ஜானை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த வருடம் ஜான் மூலம் நமது நிறுவனத்துக்குக் கிடைத்த வருமானம் 60 ஆயிரம் டாலர்கள். நிறுவனத்தின் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கும் உங்களைவிட ஐந்து மடங்கு அதிகமாக மார்க் கெட்டிங் செய்திருக்கிறார் ஜான். இத்தனைக்கும் ஜான் உங்களைவிட ஸ்மார்ட் இல்லை. உங்களை விட ஐந்து மடங்கு அதிகமாக வேலை செய்ய வில்லை. சொல்லப்போனால், உங்களைவிட அதி கமாக லீவு எடுத்திருக்கிறார் ஜான். உங்களைவிட செழிப்பான மார்க்கெட் பகுதி எதுவும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. உங்களைவிட ஐந்து மடங்கு அதிக ஆரோக்கியமானவரோ, கல்வியறிவு படைத் தவரோ இல்லை. ஆனாலும், உங்களைவிட ஐந்து மடங்கு அதிகமாக அவர் வருமானம் ஈட்ட ஒரே ஒரு காரணம்தான். அது என்ன என்று உங்களால் யோசிக்க முடிகிறதா?'' என்று கேட்டு, சின்ன இடைவெளிவிட்டார் துணைத் தலைவர்.

எல்லோரும் உதட்டைப் பிதுக்கினார்கள்.

''ரொம்ப சிம்பிள். ஜான் உங்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாகச் சிந்திக்கிறார்!''

இவ்வளவுதான் வாழ்க்கை என்கிறார் ஜே.டேவிட். சின்னதோ, பெரிதோ எப்படி யோசித்தாலும் அதற்கான மெனக்கெடல்கள் ஒன்றுதான். அப்படிஇருக்க பெரிதாக, பிரமாண்டமாக, அட்டகாசமா கவே சிந்தித்துப் பழகலாமே என்கிறார் டேவிட், தனது ‘The Magic Of Thinking Big’ புத்தகத்தில்.

சிந்தனைத் தொழிற்சாலை!

விழித்திருக்கும் ஒரு கணத்தையும் வீணாக்காமல் ஏதேனும் யோசனைகள், கருத்துக்கள், பிம்பங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும் சிந்தனைத் தொழிற்சாலைதான் நமது மூளை. அந்தத் தொழிற்சாலைக்கு இரண்டே இரண்டு தொழிலாளர்கள்தான் பொறுப்பு. ஒருவர் பெயர் வெற்றி. இன்னொருவர் பெயர் தோல்வி. வெற்றியின் வேலை பாசிட்டிவ்வான, உற்சாகமளிக்கும் எண்ணங்களை மட்டுமே உற்பத்தி செய்வது. 'ஒரு காரியத்தை உங்களால் எப்படிக் கச்சிதமாக முடிக்க முடியும். அதற்கென உங்களிடம் குவிந் திருக்கும் தகுதிகள் என்னென்ன, எத்தனை ஈடுபாட்டுடன் உங்களால் அந்தச் செயலைச் சாதிக்க முடியும்' என்றெல்ல£ம் பாசிட்டிவ் சிந்தனைகளை உங்களுக்குள் உருவாக்குவான், வெற்றி என்னும் அந்தத் தொழிலாளி.

மற்றொரு தொழிலாளியான தோல்வியும் வெற்றிக்குச் சளைக்காமல் உழைப்பவன்தான். ஆனால், 'ஒரு காரி யத்தைச் செய்வதற்கு முன் என்னென்ன எதிர்ப்புகள் எழும், அதைச் சமாளிக்கத் திணறும் உங்கள் பலவீனங்கள் என்னென்ன, உங்களைப் பின்னுக்கு இழுக்கும் சக்தி கள் என்னென்ன?' போன்ற எதிர்மறைச் சிந்தனைகளை உங்களுக்குள் தூண்டிவிட்டுக்கொண்டே இருப்பது, தோல்வித் தொழிலாளியின் வேலை. நீங்கள் முதல் எட்டு எடுத்துவைக்கும் முன்னரே, ஒருவேளை நீங்கள் தோற்றால், அடுக்கவேண்டிய காரண காரியங்களை அலசுவது மட்டுமே தோல்வித் தொழிலாளியின் வேலை.

தினமும் காலையில் எழுந்ததும் 'இந்த நாள் இனிய நாள்' என்று நீங்கள் நினைத்தால், அது வெற்றித் தொழிலாளியைத் தூண்டும் பச்சை சிக்னல். மாறாக, 'சுத்தம், இன்னிக்கு செமஸ்டர்... வெளங்குனாப்லதான்!' என்று நினைத்தால், அது தோல்வித் தொழிலாளியைத் தூண்டும் சிவப்பு சிக்னல். இனி, நீங்கள் எந்தத் தொழி லாளிக்கு அதிகமாக வேலை கொடுப்பீர்கள்?

ஆழமாக, மிக ஆழமாகத் தோண்டுங்கள்!

உங்களுக்குப் பிடிக்காத அல்லது உங்களை வசீகரிக்காத இரண்டு விஷயங்களை நினைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக இன்டர்நெட் பரிச்சயம், கர்னாடக சங்கீதக் கச்சேரிகள், டூ வீலர் ஓட்டுவது, மாடர்ன் ஆர்ட் ரசிப்பது, வரலாறுபற்றி படிப்பது, சாகித்ய அகாடமி பரிசு வென்ற நாவல் படிப்பது, ஜிம்முக்குச் செல்வது, ஆங்கிலம் கற்றுக்கொள்வது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதுநாள் வரை உங்களுக்குப் பிடிக்காத அந்த சங்கதிகளைப்பற்றிய பேச்சு எழுந்தாலே, சின்ன முகச்சுளிப்புடன்தான் நீங்கள் அதை எதிர்கொண்டு இருப்பீர்கள்.

ஆனால், நீங்கள் வெறுக்கும் அல்லது விரும்பாத அந்தச் சங்கதிகளைப்பற்றி நீங்கள் எந்த அளவுக்கு அறிந் திருப்பீர்கள்? 'அதிகமாக எதுவும் தெரியாது' என்பதுதானே உங்கள் பதிலாக இருக்கும்! சாக்லேட்டின் இனிப்பை ருசிக்கும்வரை ஒரு குழந்தைக்கு சாக்லேட் மீது எந்த ஆசையும் இருக்காது. அப்படியான மனநிலைதான் ஒரு விஷயத்தின் மீதான நமது வெறுப்பும். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் முழுக்க அறிந்துகொண்ட பிறகுதானே அதன் மீதான விருப்பு, வெறுப்பை நாம் தீர்மா னிக்கமுடியும்? ஆரம்பத் தயக்கங்கள் பயங்களை உதறி, நன்றாக நீந்தக் கற்றுக்கொண்ட பிறகு, நீச்சல் குளத்தி லேயே பழியாகக் கிடப்பவர்கள்தான் அதிகம். எந்த ஒரு விஷயத்தின் மீதும் முடிவெடுக்கும் முன் அதைப்பற்றி ஆதி முதல் அந்தம் வரையிலான அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்ளுங்கள். 'ஏதோ

செல்போனாம்; தினமும் சார்ஜ் போட்டாத்தான் பேச முடியுமாம்; முன்னாடியே காசு கட்டிரணுமாம். எனக்கு லேண்ட் லைனே போதும்பா!' என்று செல்போனைப்பற்றி எதுவுமே தெரியாமல், அதன் மேல் வெறுப்பு காட்டுவது புத்திசாலித்தனமா என்ன?

View user profile

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum