KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.

Join the forum, it's quick and easy

KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்! EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள்!

Go down  Message [Page 1 of 1]

Geetha_Latha

Geetha_Latha
Admin

நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ யாருக்குத்தான் ஆசை இல்லை? ஆனால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிராகிவிடுகிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையே உணவுதான். உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் உடலில் உள்ள செல்கள் முதிர்வடையும் செயல்பாட்டை ஓரளவுக்குத் தாமதப்படுத்துவதுடன், நோய்நொடி இல்லாமல் வாழவும் முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் சில காய்கறி மற்றும் பழங்கள்பற்றி ஊட்டச்சத்து நிபுணர் சோபியா கூறும் தகவல்கள்:

ஆப்பிள்: அமெரிக்காவில் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தப் பெண்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்ததைக் கண்டறிந்தனர். ஆப்பிள், எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் திசுக்களைப் பாதிக்கும் ரசாயன மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடி திசுக்கள் சேதம் அடைவதைத் தடுக்கின்றது. இதனால் திசுக்கள் விரைவாக முதிர்வடையும் தன்மை குறைவதுடன், நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது.

பாதாம்: வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்தது. இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள், நார்ச்சத்துகள் ஆகியவையும் இதில் அதிக அளவில் உள்ளன. நாள் ஒன்றுக்கு மூன்று பாதாம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இதில் உள்ள தாமிரம் மற்றும் மக்னீசியம் உடலுக்கு ஆற்றலை அளிக்கும். பாதாமில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

எலுமிச்சை: தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பது என்பது வெறும் தினசரி வைட்டமின் சி தேவையை 100 சதவிகிதம் பூர்த்தி செய்வது மட்டுமல்ல; நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்கவும் உதவும். மேலும், இது எலும்பை உறுதிப்படுத்தும். எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ், திசுக்கள் வீக்கம் அடையும் பிரச்னையைச் சரிசெய்வதுடன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

பூண்டு: நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருகச் செய்வதுடன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும். இது எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். மேலும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும். இதில் உள்ள அலிசின் (allicin) உயர் ரத்த அழுத்தத்தைக் குறிப்பிடத் தகுந்த அளவில் குறைக்கிறது. கல்லீரலில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

டார்க் சாக்லேட்: குறைந்த அளவில் டார்க் சாக்லேட் அல்லது கறுப்பு சாக்லேட்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும், ரத்தம் கட்டிப்போகும் பிரச்னையைத் தவிர்க்கும். ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. இதில் உள்ள தாமிரம் மற்றும் பொட்டாசியம் தாது உப்புகள் பக்கவாதம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து காக்கும். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதால் ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம். மேலும் உயர் ரத்த அழுத்தம், 'டைப் 2’ சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் டார்க் சாக்லேட்டுக்கு உண்டு.

சோயாபீன்: சோயாபீனை தாவர இறைச்சி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதில் புரதச் சத்து உள்ளது. உடலில் புரதச் சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும் ஆற்றல் சோயாபீனுக்கு உள்ளது. சோயாபீனில் உள்ள 'லெசிதின்’ (lecithin) என்ற வேதிப் பொருள் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை எளிதில் கிரகித்து திசுக்கள் மற்றும் உறுப்புகளை வலுப்படுத்தும். மேலும், இது கொழுப்பு அளவைக் குறைத்து, வளர்ச்சிதை மாற்றப் பணிகளை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் இது நல்ல கொழுப்பை எதுவும் செய்வதில்லை!

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum